
இதன்போது சம்பவ இடத்திலேயே இருவர் மரணமடைந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்து, வகுப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
19 வயதுடைய காச்சாமலை பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கவிஷான் என்பவரும் 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான புஸ்பகுமார என்பவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பஸ்ஸில் 70 பேர் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தையடுத்து, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் பஸ்ஸை எரித்துள்ள நிலையில், குறித்த வீதியில் பயணிகள் போக்குவரத்தில் இரண்டு பஸ்களே சேவையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
