ஐஓசி எ‌ரிபொரு‌ள் நிலையங்கள் பூட்டு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐஓசி எ‌ரிபொரு‌ள் நிலையங்கள் பூட்டு!!


பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும், திருகோணமலையில் உள்ள பெற்றோலிய முனையத்தையும், லங்கா ஐஓசி நிறுவனம் நாளை (09) மூட வாய்ப்புள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்தில் கொண்டு தமது முனைய எரிபொருள் நிலையங்களை மூடுவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் கூறினார்.

நேற்றிரவு காலியில் எரிபொருள் வரிசையில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 25 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவத்தையடுத்து எரிபொருள் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்கும் அதே வேளையில் ஐஓசி ஊடாக மட்டுமே தற்போது தனியார் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.