
54 அங்குல இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளைத் திருடியவர் சமையல்காரர் ஒருவர் என கிருலப்பனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் தங்கும் விடுதியில் ஒரு தொலைக்காட்சியும், மற்றைய தொலைக்காட்சி 10,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டது.
இந்த இரு தொலைக்காட்சிகளில் பெறுமதி சுமார் ஆறு இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நபர் ஐஸ் எனப்படும் போதைப்பொருளுக்கு அதிகளவில் அடிமையாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. (யாழ் நியூஸ்)