
போராட்டங்களை நடத்தி ஆட்சியாளர்களை விரட்டியடிக்கும் முறையை விட்டுவிட்டு தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை விடுவித்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு ஒரு அனர்த்தத்தை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் தற்போதைய ஜனாதிபதி அச்சமின்றி சவாலை ஏற்றுக்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், சகல சவால்களையும் வெற்றி கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (24) பிற்பகல் சேதவத்த, வெஹெரகொட புராதன விகாரைக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், அங்கு இருந்த தேரர் ஜனாதிபதிக்கு அறிவுரை வழங்கி இதனைக் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)