இலங்கைக்கு வரும் விமானங்கள் தாம் திரும்புவதற்கு எரிபொருள் வைத்திருப்பதை உறுதிசெய்து இலங்கைக்கு பறக்க விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் பரிந்துரைத்தது.
நாள் ஒன்றுக்கு இலங்கைக்கு 105க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து புறப்படும் என இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
சேவைகளை வழங்குவதற்காக அழைக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையும் அதே காரணத்திற்காக வரையறுக்கப்பட்டுள்ளது, என்றார். (யாழ் நியூஸ்)