பிரதமரின் விசேட அறிவிப்பு - இராஜினாமா இவ்வாறு தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமரின் விசேட அறிவிப்பு - இராஜினாமா இவ்வாறு தான்!

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு பெரும்பான்மை பலத்தை அறிவித்ததன் பின்னர் பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதுவரை நாட்டின் விவகாரங்களை முன்னெடுத்துச் செல்ல பிரதமராக பணியாற்றுவேன் என்றார்.

இன்று இலங்கையில் எரிபொருள் பிரச்சினையும் உணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக உலக உணவு அமைப்பின் தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்துடன் சில முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் பிரதமர் கூறுகிறார்.

எனவே தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்த பின்னர் உடனடியாக வேறொரு அரசாங்கத்தை நியமிக்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

முழு நாட்டையும் உள்ளடக்கிய எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், உலக உணவுத் திட்டத்தின் பணிப்பாளரும் இந்த வாரம் நாட்டுக்கு வரவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மை அறிக்கை முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவித்த பிரதமர், இந்த உண்மைகளை கருத்திற்கொண்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.