
எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் ஆர்டர் செய்யப்படும் எரிபொருள் ஆர்டர்கள் முறையாகப் பெறப்படுவதில்லை என அதன் தலைவர் டபிள்யூ. எஸ். பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை கொண்டு செல்லுமாறு இலங்கை பெற்றோலிய சட்டமூலக் கூட்டுத்தாபனம் கட்டளைகளை வழங்கியுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி (பவுசர்) உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய எண்ணெய் நிறுவனத்தின் 150-200 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கொண்டு செல்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் செயலாளர் திரு.சாந்த சில்வா குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)