ஒரு லீட்டர் பெட்ரோல் 250 ரூபாய்க்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரு லீட்டர் பெட்ரோல் 250 ரூபாய்க்கு!


ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவிற்கு வழங்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று (06) கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே ஜனக ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“நாம் பார்த்தபோது இங்கு ஏதோ தவறு இருப்பதை உணர்ந்தோம். இந்த எண்ணெய் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் மின்சார சபைக்கு வழங்கப்படுகிறது. இது தொடர்பில் ஆராய்ந்த போது அமைச்சர் முன்வைத்த விலைச்சூத்திரம் எவ்வித அடிப்படையுமின்றி முன்வைக்கப்பட்டுள்ளதை உணர்ந்தோம்.

அமைச்சரா தயாரித்துள்ளார் அல்லது அமைச்சின் அதிகாரிகளா?

"அது எனக்கு தெரியாது. அமைச்சர்தான் ட்வீட் செய்தார். அவருடைய ட்விட்டரில் இருந்துதான் நான் பெற்றேன். எமக்கு முழுமையான தரவு கிடைத்தது. இறக்குமதி செலவு மற்றும் வரி ஆகியவற்றைக் கண்டுபிடித்தோம். இரண்டுக்கும் இடையே பொதுவாக 150-200 ரூபாய் வித்தியாசம் இருக்கும். அப்படியாயின், எமக்கு டீசல் இறக்குமதி செய்வதற்கான அடிப்படை செலவு CIF குறிப்பிட்டுள்ள மதிப்பு 174 ரூபாய்களாகும். ஆனால் தரவுகளைப் பார்க்கும்போது, ​​​​இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளின் விலை 174 அல்ல. இறக்குமதி செய்யப்பட்ட விலை 100 - 110 ரூபாய்களாகும்.

ஐஓசி ஜூலை முதலாம் திகதி ஒரு தொகுதி டீசலைக் கொண்டு வந்துள்ளது. உண்மையில், எரிபொருள் இறக்குமதி செலவு 350 ரூபாவுக்கு அதிகமாகாது. இது பொய்யல்ல. ஆவணங்களில் உள்ள உண்மைக் கதை."

அப்படியாயின் 250 ரூபாய்க்கு குறைவாகவா கொண்டு வரப்பட்டுள்ளது?

"இப்போது எங்கள் பிரச்சனை என்னவென்றால், ஃபர்னஸ் ஒயிலின் செலவு 171 ரூபாய். பெற்றோலிய கூடுத்தாபனம் அதை மின்சார சபைக்கு க்கு 419 ரூபாய்க்கு கொடுக்கிறது. அவர்கள் ஒரு லீற்றருக்கு 250 ரூபாய் வசூலிக்கிறார்கள்."

அமைச்சர் மஹிந்த அமரவீர - சாதாரண மக்களுக்கு தேவையாக உள்ளது டீசல், பெற்றோல்தானே? 250 ரூபாய்க்கு வழங்க கூடியதாக இருக்கும் போது 400 ரூபாய்க்கு வழங்குவதாகதானே தாங்கள் சொல்கிறீர்கள். ?

"ரூ. 400 - ரூ. 450 என்று யாராவது சொன்னால் அது பொய். இது ஒரு உண்மைக் கதை, நான் உங்களுக்கு சொல்கிறேன், இறக்குமதியின் செலவு ரூ. 200 ஆக இருக்கும்போது எப்படி 400 ரூபா ஆகும். அப்படி நடக்க முடியாது. வரி செலுத்திய பிறகு. , ஒவ்வொரு எரிபொருள் விலையும் ரூ.250, ரூ.170, ரூ.180. ரூ.220. இந்த உண்மைக் கதை கடந்த வாரம் வரையானது. இந்த சூத்திரம் முழுவதுமாக பிழையானது. இது நடந்துள்ளது. தரவுகளை வழங்கியுள்ளேன்.

குறைந்த விலையில் ஒரு லீற்றர் எரிபொருளை வழங்கும் முறை தொடர்பில் வினவிய போதே ஜனக ரத்நாயக்க இதனை விளக்கினார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.