
கடந்த 09ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக கோட்டபாய ராஜபக்ஷ மாலைதீவுக்கு தப்பி சென்று, பின் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றதுடன், அங்கு தனது நண்பர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம், சிங்கப்பூர் அரசால் இனி பாதுகாப்பு அளிக்க முடியாது எனவும், நாட்டை விட்டு 15 நாட்களுக்குள் வெளியேறும்படி கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.