VIDEO: வாதுவை பள்ளிவாசல் வரலாறு என்ன? நடந்தது என்ன ? நடக்க வேண்டியது என்ன ?
advertise here on top
advertise here on top
happy kids fun world

VIDEO: வாதுவை பள்ளிவாசல் வரலாறு என்ன? நடந்தது என்ன ? நடக்க வேண்டியது என்ன ?

வாதுவையில் ஒரு பள்ளி வாசல் இருந்ததாகவும், அப்பகுதியில் முஸ்லிம்கள் வாழ்ந்ததாகவும் தூர்ந்து போன பள்ளிவாசலின் அடையாளங்கள் அப்போதும் காணப்படுவதாகவும், தான் சென்று அதை பல முறை பார்வையிட்டதாகவும், அவ்இடம் இன்னும் யாராலும் கைப்பற்றப்படாமல் பாதுகாப்பாக இருப்பதாகவும் பேருவளை பெலஸ்பாத் பகுதியைச் சேர்ந்த ஹுசைன் லாபிர் ஆலிம் சுமார் 30 வருடங்களுக்கு சொல்ல செவியுற்று இருக்கிறேன்.

தற்போதும் அவர் சுகவீனமற்ற நிலையில் உள்ளார். இவர் தற்போது வயதானவர் இலங்கை முஸ்லிம்களின் சரித்திர வரலாறு பற்றிய நிறையவே தகவல்களை அறிந்தவர்.

அப்போது பேருவளை மருதானை பகுதியில் வாத்துவ வீடு பெயர் என பெயர் கொண்டு அழைக்கப்படும் சில வீடுகள் இருந்தன. அப்போது அவை ஏன் வாத்துவை வீடுகள் என அழைக்கப்படுகின்றது என்பது புரியவில்லை. அதன் இப்போதும் அந்த வாத்துவ வீட்டுக் குடும்பங்கள் அதே பெயருடன் அப்பகுயில் தற்போதும் வசித்துவருகின்றனர். இதன் அர்த்தம் இப்போதே புரிகின்றது.

இவை ஒரு புறமிருக்க, அண்மையில் பாணந்துறை பிரதேச சபையின் உறுப்பினர், நவ்ஷாட் அவர்கள் வாதுவை பள்ளிவாசல் சம்பந்தமாக பாணந்துறை பிரதேச சபையில் நிகழ்த்திய உறை முக்கியம் பெறுகிறது.

இதன்போது அவரை தொடர்பு கொண்டு அவரிடம் இவை பற்றி விசாரித்தபோது விபரங்களை பின்வருமாறு கூறினார்.

பல மாதங்களுக்கு முதல் தனது வீட்டிற்கு தன்னைத் தேடி ஒருவர் வந்தார். அவர் ஒரு பௌத்தர். ஒரு வயதானவர். நிறைய உண்மைகளை அறிந்து வைத்திருந்தார். ஒரு நல்ல மனிதர். தான் மறைத்து வைத்திருக்கும் உண்மைகளை தான் இறப்பதற்கு முதல் வெளிப்படுத்த வேண்டும், போன்ற ஒரு குற்றவுணர்வு அவரின் மனதில் தோன்றி இருக்கலாம்.

அவர் அப்பகுதிக்கான வரைபடம் ஒன்றைத் தன்னிடம் கொடுத்து இப்பகுதியில் ஒரு பள்ளிவாசல் இருந்ததாகவும், இது 1905 ஆம் அண்டு கட்டப்பட்டதாகவும், இதன் பரப்பளவு ஒரு ஏக்கர் எனவும், இப்பள்ளி வாசலுடன் ஒரு மையவாடியும் இருந்ததாகவும், இதில் ஜனாஸாக்கள் அடக்கப்பட்ட அடையாளங்கள் காணப்பட்டதாகவும், அண்மைக் காலத்தில் இது டோஸர் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் இதை ஒருவர் தனது பெயரில் திருட்டுத்தனமாக மற்றியுள்ளதாகவும், அவர் தற்போது அதனை துண்டங்களாக விற்பனை செய்ய முயற்சித்து வருவதாகவும், இதை வெளிப்படுத்தும் படியும் இதற்கு தான் எந்த இடத்திலும் உண்மையை சொல்லத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இதை பெற்றுக்கொண்ட உப்பினர் நவ்ஷாட் அவர்கள் இதை எ‌வ்வாறு வெளிப்படுத்துவது, இதை வெளிப்படுத்துவாதால் முஸ்லிம் சமூகத்திற்கு வேறு விதமான பிரச்சினைகள் ஏற்பட்டு விடக் கூடாது என்று பல மாதங்களாக தான் சிந்தித்ததாகவும் தெரிவித்தார்.

இதை அரசாங்கம் சுவீகரித்து, முஸ்லிம் பள்ளி வாசல் அவ்விடத்தில் கட்டப்படாவிட்டாலும் அவ்விடத்தில் முஸ்லிம் வரலாறுகளை நினைவ படுத்தும் விதமாக ஒரு பொது மக்கள் மண்டபம் அல்லது ஒரு வைத்தியசாலை அமையப்பெற அரசு நடவடிக்க எடுக்க வேண்டு்ம் என்றும் சூசகமான முறையி்ல் தனது உறையை நிகழ்த்தியதாகவும் தெரிவித்தார்.

இதன் வரலாறு என்ன ?

ஆரம்ப காலத்தில் வர்த்தக நோக்கத்தில் இலங்கையில் குடியேறிய முஸ்லிம்கள் பல்வேறு பகுதிகளில் குடியேறி சிங்கள பெண்களை மணமுடித்து வாழ்ந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

இந்த அடிப்படையில் வதுவை பகுதியிலும் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான வரலாறுகள் உள்ளன.

காலப்போக்கில் இவர்கள் சுமார் 72 குடும்பங்களாக பெருகி வாழ்ந்து வந்ததாகவும், அவர்களால் கட்டப்பட்ட இப்பள்ளிவாசலானது வரலாற்றுக் காலம் சரியாக கிடைக்காவிடினும், இது 1905 ஆம் ஆண்டுமுதல் இது கட்டப்பட்டதற்கான உறுதிப் பத்திரங்கள் இதன் வரலாறுகள் உ‌ள்ளதாகவும் தெரிவித்தார் .

1917 ஆம் ஆண்டு அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் அப்பகுதியில் வாழ்ந்த பெண்ணொருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதில் ஏற்பட்ட கலவரம் ஒன்றின் காரணமாக அப்பகுதியில் இருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்க பட்டதாகவும் வரலாறுகள் உள்ளன.

இதனால் இப்பகுதி முஸ்லிம்கள் பேருவளை, பாணந்துறை எலுவிலை போன்ற பகுதிகளில் குடியேறி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இக்குடும்பங்கள் இன்றும் வாதுவை வீடு என அழைக்கப்பட்டு வருகிறது.

காலப் போக்கில் இப்பகுதியிலும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்த காணிகளில் ஏனைய மக்கள் குடியேறி வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

பள்ளிவாசல் காணியை பொருத்தவரை அக்காலத்தில் இப்பள்ளி வாசலின் வுளூ செய்யும் நீர் தடாகத்தில் பெரிய ஒரு மீன் காணப்பட்டதாகவும், அந்த மீனை ஒரு பெண் பிடித்துச் சென்று கறி சமைத்து சாப்பிட்டதாகவும், அந்த நாள் முதல் அப்பெண்ணுக்கு ஏதோ ஒரு நோய் ஏற்பட்டதாகவும், அதனால் அவள் இறந்து போனதாகவும், செல்லப்படுகிறது.

இதன் காரணமாக இந்த இடம் ஒரு தேவஸ்தானமமாக இருந்ததனால் இது பலி வாங்கப்படுகிறது. இந்த இடம் ஒரு பழி வாங்கும் இடம் என அக்காலத்தில் பெயர் பெற்றதாகவும், அதனால் அப்பகுதி மக்கள் பள்ளிவாசல் அமைந்திருந்த இடத்தை அதை அபகரிப்பதிலிருந்து பயந்து தவிந்து கொண்டதாகவும் வரலாறுகள் செல்லப்படுகின்றன.

இதன் காரணமாகவே பள்ளிவாசல் அமைந்திருந்த இடம் இன்றும் பாதுகாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

பிரதேச சபை உறுப்பினர் நவ்ஷாத் அவர்களிடம் மேலதிக விபரங்களை கேட்டறிந்த போது தன்னிடம் ஆரம்ப காலத்தில் வரையப்பட்ட வாதுவை பகுதியின் வரைபடம் தன்னிடம் உள்ளதாகவும், அதில் பள்ளிவாசல் தெளிவாக காட்டப்பட்டுளதாகவும். பின்னர் இதன் மீது எழுதப்பட்ட போலியான உறுதிப்பத்திரம் தன்னிடம் உள்ளதாகவும், போலி உறுதி பத்திரத்தில் உள்ள இலக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு உண்மையான உறுதிப்பத்திரத்தினை தேட முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இருந்தாலும் தன்னால் முடியுமான அளவு உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளதாகவும். முஸ்லிம்களின் வரலாறை பாதுகாக்க இது சம்பந்தமாக பொறுப்பானவர்கள் கரிசனை கொண்டதாக தெரியவில்லை எனவும் கவலை தெரிவித்தார்.

மேலும் இது சம்பந்தமாக தான் பிரதேச சபையில் 16 நம்மிடம் கொண்ட ஒரு வரலாற்று உறையை ஒன்றை நிகழ்த்தியதாகவும், அதன் காணெளியை இரண்டு நிமிடங்கள் ம‌ட்டுமே வெளியிடப்பட்டதாகவும், ஏனைய உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க தான் பதிவு செய்வதை நிறுத்திக் கொண்டதாகவும்,  தான் உறை நிகழ்த்திய பின்பு தனது உரையை ஒரு மாற்று மத சகோதர உறுப்பினர் சபையில் உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

மேலும் கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தன்னை தொடர்பு கொண்டு இதற்கான உதி பத்திரங்களையும் ஆவணங்களையும் கோரியதாகவும் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களை இது சம்பந்தமாக தொடர்பு கொண்டு கேட்டபோது போலியான உறுதிப்பத்திரத்தினை வைத்து இதற்காக குரல் கொடுக்க முடியாது என்றும், உண்மையான உறுதி பத்திரம் கண்டுபிடிக்கப்பட்டால் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.

எனவே இப்பகுதிக்கு ஒரு பள்ளிவாசல் தேவையற்று இருந்தாலும் உறுப்பினர் நவ்ஷாத் அவர்கள் குறிப்பிட்டது போல் முஸ்லிம்களின் வரலாறை பாதுகாக்க இவ்விடத்தை அரசாங்கம் சுவீகரித்து இவ்விடத்தில் ஒரு பொதுமக்கள் மண்டபம், அல்லது ஒரு வைத்தியசாலை அமைப்பது சிறந்ததாகும்.

எனவே இது சம்பந்தமான முஸ்லிம் சமூகத்தின் முக்கிஸ்தர்கள் கவனம் செலுத்துவார்களா ?

( பேருவளை ஹில்மி )Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.