
செய்தியாளர்களிடம் பேசிய தம்மிக்க பெரேரா, அரசாங்கம் தனக்கு பொருத்தமான அமைச்சுப் பதவியை வழங்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது முதலீட்டுச் சபைக்கு தலைமை தாங்கியதாகத் தெரிவித்த தம்மிக்க, தற்போதைய நெருக்கடிக்கும் தீர்வை வழங்குவதில் நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்.
மேலும் "பொதுமக்கள் தமது வேலை இழக்கும் நேரத்தில், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக நான் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளேன்," என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)