ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட துமிந்த சில்வா மீண்டும் எவ்வாறு கைது செய்யப்பட்டார்? ( ஆய்வு )

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட துமிந்த சில்வா மீண்டும் எவ்வாறு கைது செய்யப்பட்டார்? ( ஆய்வு )

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு இடைநிறுத்தப்பட்டது.

துமிந்த சில்வா மீண்டும் கைது செய்யப்பட்டார். இவ்வாறன ஒரு செய்தியை இலங்கை நாட்டை பொறுத்தவரையில் செவியுறும் போதும் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஒப்பிடும்போதும் புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிராகவே உள்ளது.

1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி முறைமையை ஆரம்பித்து வைத்த ஜே ஆர் ஜயவர்தன அவர்கள் கூறியதாவது.

"தனக்குள்ள அதிகாரத்தின் படி ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாததை தவிர, ஏணைய அத்தனையையும் சாதிக்க தனக்கு அதிகாரம் உள்ளது" என பாராளுமன்றத்தில் அன்று தெரிவித்தார்.

அதிகாரம் அவ்வாறு இருக்க ; நடந்தது என்ன ?

1978 ஆம் ஆண்டு ஜே ஆர் ஜயவர்தன அவர்களின் காலத்தில் எழுதப்பட அரசியல் யாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அம்சமே ஜனாதிபதி மன்னிப்பாகும்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் 1977 ஆம் ஆண்டு ஜயவர்தன அவர்கள் கண்ட வெற்றி இதன் பிரகு இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு அரசியல் கட்சியால் அடைய முடியுமா என்பது சந்தேகமே.

அப்போதைய பாரளுமன்றத்தில் மொத்த ஆசனத்தில் எட்டு ஆசனங்களை மட்டுமே பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி கைப்பற்றியது. எதிர்கட்சியாக இலங்கை தமிழர் கூட்டணியின் தலைவர் ஆ. அமிர்த லிங்கம் அவர்கள் எதிர்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றினார்.

அன்று ஜயவர்தன அவர்களுக்கு கிடைத்த பெரும் பான்மையையே நாட்டின் இன்றைய நிலைக்கு முதல் காரணமாகும்.

இலங்கை அரசியல் யாப்பின் வரலாற்றில் 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் யாப்பானது இலங்கையில் ஜனாதிபதியாக வரும் ஒரு தனி மனிதனுக்கு வழங்கப்பட்ட அதிகார உச்ச வரம்பின் ஆரம்பமாகும். இதுவே இலங்கையின் சர்வதிகார போக்கில் ஆட்சியமைக் முதல் வித்திட்டது.

இதனை தொடர்ந்து வந்த அரசியல் யாப்புகள் அத்தனையும் தொடர்ச்சியான தனி மனித அதிகாரங்களை அதிகப்படுத்தியதே தவிர எவ்விதமான அதிகார குறைப்புக்களையும் ஏற்படுத்தவில்லை.

இவை அத்தனைக்கும் ஆப்பு வைக்கும் விதமாகவே 19ம் திருத்தச் சட்டமூலம் அமைந்தது. அதற்கு முதலில் இருந்த அத்தனை தனி மனித அதிகாரங்களில் அதிகமான வற்றை செயலிழக்கச் செய்து, அதிகாரங்கள் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டு, அத்தனையும் சுயாதீனமாக இயங்க வழி வகுத்தது.

இந்த வகையில் 19ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு முன்னர் தொடர்ந்து இலங்கை அரசியல் யாப்பில் பல்வேறுபட்ட காலப்பகுதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஜனாதிபதி மன்னிப்பு தொடர்பான அம்சம் திருத்தம் செய்யப்படாமல் தொடர்ந்து வந்தது.

இதன் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தமது பதவிக்காலம் முடியும் போது மரண தண்டனை குற்றவாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கிச் சென்ரார்.

1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின்படி ஜனாதிபதி தனது அதிகாரத்தை கொண்டு செய்யும் தவறுகளுக்கும் பிழைகளுக்கும் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்ற அம்சம் உள்ளடக்கப்பட்டது.

அதாவது 19 ஆம் திருத்தச் சட்ட மூலத்திற்கு முன்பாக இலங்கையில் நடைமுறையில் இருந்த அத்தனை அரசியல் யாப்புகளிலும் 34 ஆம் பிரிவில் உள்ள ஜனாதிக்கு உள்ள பொது மன்னிப்பு சம்பந்தமான அதிகாரம், நாட்டிலிருந்த அனைத்து அரசியல் யாப்பு களிலும் ஜனாதிபதிக்கு எதிராக அவரது கடமைசம்பந்தமாகவும், அவரது தனிப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக வழக்கு தொடர முடியாது என்ற அம்சம் தொடர்ச்சியாக பேணப்பட்டு வந்தது.

19 ஆம் திருத்தச் சட்டமூலத்தில் இதில் சிறிது மாற்றம் செய்யப்பட்டது. ஜனாதிபதி செய்யும் தவறுகளுக்கும் பிழைகளுக்கும் எதிராக வழக்கு தொடர முடியும் என்ற அம்சம் உள்ளடக்கப்பட்டு, குறித்த விடயம் தொடர்பான வழக்குகளுக்கு நேரடியாக ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு பதிலாக சட்டமா அதிபரை ஜனாதிபதிக்கு பதிலாக பிரதிவாதியாக குறிப்பிட முடியும் என்ற அம்சம் உள்வாங்கப்பட்டது.

எனேவ ஜனாதிபதிக்கு பதிலாக சட்டமா அதிபர் பொறுப்புச் சொல்ல கடமைபாபட்டவராக காணபாபடுகின்றார்.

இந்த அம்சமானது 1978 ஆம் ஆண்டிற்கு பின்பு நகறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை என்ற போர்வையின் கீழ், இரும்பு கரம் கொண்டு நசுக்கப்பட்ட ஒரு பொது மகனின் உரிமையின் ஒரு சிறிய விடுதலையாகும்.

இருந்த போதிலும் ஜனாதிபதியினால் நாட்டின் பாதுகாப்பு, மற்றும் நாட்டின் பொதுவான நலன்கள் சம்பந்தமாகவும் ஜனாதிபதியினால் எடுக்கும் முடிவுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து வழக்கு தொடர முடியாது என்ற அம்சம் மாத்திரம் தொடர்ச்சியாக பேணப்பட்டு வருகின்றது.

19ம் திருத்தச்சட்ட மூலம் மாற்றப்பட்டு 20 ஆம் திருத்தச் சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், இலங்கை அரசியல் யாப்பின் 34 வது பிரிவின்கீழ் வரும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பற்றிய விடயங்களிலும் இதனைத் தொடர்ந்து உப பிரிவுகளில் வரும் விடயங்களில் திருத்தங்கள் 20 ஆம் திருத்த சட்ட மூலத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

ஆகவே இலங்கையின் 20 ஆம் திருத்தச் சட்டமூலத்தின் ஜனாதிபதியின் முடிவுகளில் ஒரு சாதாரண பொது மகனுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஜனாதிபதியினால் வழங்கப்படும் பொது மன்னிப்பானது, குறிப்பிட்ட வழக்குடன் சம்பந்தப்பட்ட வாதிக்கு அதன் மூலம் அநீதி இழைக்கபாபடுமாக இருந்தால், ஜனாதிபதியின் மன்னிப்புக்கு எதிராக மனு தாக்கல் செய்ய முடியும்.

முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரதலக்சுமன் அவர்களகனின் கொலை வழக்கில் துமிந்த சில்வா அவர்கள் குற்றவழியாக அடையாளம் காணப்பட்டு தண்டனை வழங்கப்பட்டார்.

இந்த வழக்கு பிரதி வாதியினால் மேன் முறையீடு செய்யப்பட்ட போதிலும், அந்த வழக்கிலும் முதல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானதே என மீண்டும் நீதி மன்றத்தினால் உறுதி செய்யப்பட்டது.

எனவே 19 இலக்க திருத்தத்தில் இந்த சட்டத்தின் உரிமையை அடிப்படையாக வைத்தே துமிந்த சில்வாவின் மன்னிப்பின் மூமாக தமது குடும்பத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்ட வழக்கின் வாதியினால் வழக்கு தொடரப்பட்டது.

ஆகவே 19 ஆம் திருத்த சட்டமூலத்தின் அடைப்படையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு எதகராக மனுத்தாக்கல் செய்ய முடியும் என ஒரு நாட்டின் பொதுமகனுக்கு உரிமை கிடைப்பதோடு, அதைவிசாரிப்பதற்கான அதிகாரமும் நீதிமன்றத்திற்கு கிடைக்கப்பெறுகிறது. இந்த அடிப்படையிலேயே துமிந்த செல்வாவின் பொது மன்னிப்பு இடை நிறுத்தப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.

( பேருவளை ஹில்மி )
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.