வாகன இலக்கத் தகடுகளின் அடிப்படையில் எ‌ரிபொரு‌ள் விநியோகம் செய்யப்படும்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

வாகன இலக்கத் தகடுகளின் அடிப்படையில் எ‌ரிபொரு‌ள் விநியோகம் செய்யப்படும்!

பெற்றோல் வாகன உரிமையாளர்கள் அடுத்த 3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்பின்னர் வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரவித்தார்.

தற்போது பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் பெற்றோல் இருப்புக்கள் மிகவும் குறைவாக உள்ளதாகவும், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

லங்கா ஐஓசி சில பெற்றோல் பங்குகளை வைத்திருப்பதாகவும், பெட்ரோலை சந்தைக்கு விநியோகிக்குமாறு லங்கா ஐஓசியிடம் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

பெற்றோல் ஏற்றிய கப்பல் எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதியே நாட்டிற்கு வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எனவே, திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பொதுமக்கள் எரிபொருள் வரிசையில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜூன் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் வரவிருக்கும் பெற்றோல் மற்றும் டீசல் ஏற்றுமதிகளுக்காக 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாக காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் போதுமான அளவு டீசல் கையிருப்பு இருப்பதாகவும், தற்போது விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அனைத்து பொதுப்போக்குவரத்து பேருந்துகளும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்காமல், அருகிலுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் நிரப்பு நிலையங்களிற்கு செல்லுமாறும் தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் தனியார் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடுகளின் இறுதி இலக்கத்திற்கடைய தினமொன்றை ஒதுக்கி எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றார்.

அடுத்த வாரம் முதல் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வைத்தியர்கள், பொலிசாருக்கு வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றார்.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.