
தங்காலை மொட்டகெட்டியார பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மூன்று நாட்களில் நாட்டில் பதிவான 4 ஆவது துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும்.
அஹங்கமவில் 27 வயதுடைய நபர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
அளுத்கம மற்றும் பாணந்துறையில் வெள்ளிக்கிழமை மேலும் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். (யாழ் நியூஸ்)