ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோவை கைது செய்ய பிடியாணை உத்தரவு!
advertise here on top
advertise here on top
happy kids fun world

ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோவை கைது செய்ய பிடியாணை உத்தரவு!


நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கு பகிரங்க பிடியாணையை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்கமைய ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

கடந்த மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணையை தாக்கல் செய்திருந்தார்.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.