முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்காவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை!
advertise here on top
advertise here on top
happy kids fun world

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்காவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை!


வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இந்நிலையில் பிரசன்ன ரணதுங்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும் 25 மில்லியன் அபராதம் செலுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஒரு தொழிலதிபரை தொலைபேசியில் மிரட்டி அவரிடம் இருந்து 64 மில்லியன் ரூபாய் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 06 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அப்போதைய மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மொரீன் ரணதுங்க மற்றும் நரேஷ் குமார் ஃபரீக் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் 15 குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்தார். 

கொலன்னாவ மீதொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் அனுமதியற்ற ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி நிலத்தை மீள நிரப்புவதற்காக ஜெராட் மென்டிஸ் என்ற வர்த்தகரை அச்சுறுத்தி 64 மில்லியன் ரூபா கோரியதாக மூவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.