
இம்மாதம் 23 ஆம் திகதி பெற்றோல் கப்பல் ஒன்றும், 24 ஆம் திகதி டீசல் கப்பல் ஒன்றும் வரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாயம், மீன்பிடி போன்றவற்றுக்கு ரேஷன் முறை மூலம் முன்னுரிமை வழங்குவதன் மூலம் நெருக்கடியை ஓரளவுக்கு தணிக்க முடியும் என்றும் ஆனால் எரிபொருள் குவிப்பைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், சியாம் நிறுவனம் உறுதியளித்த திகதியில் எரிவாயு விநியோகம் செய்யாததால் குறைந்த விலையுள்ள ஓமானிய நிறுவனத்திடம் இருந்து எரிவாயுவை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)