
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி சார்பாக சரித் அஸலங்க 110 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 254 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 எனும் விகிதத்தில் இலங்கை கைப்பற்றியது.
அவுஸ்திரேலியாவுக்கெதிராக சொந்த மண்ணில் 30 ஆண்டுகளின் பின்னர் இருதரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரொன்றில் இலங்கை வென்றுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.