இந்திய பெண்ணுடன் அக்கரைபற்று பெண்ணுக்கு காதல் - மனநல பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்திய பெண்ணுடன் அக்கரைபற்று பெண்ணுக்கு காதல் - மனநல பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

இலங்கையில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த இரு பெண்களை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

சந்தேகநபர்கள் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவரும், சமூக ஊடகங்கள் ஊடாக இரண்டு வருடங்களாக உறவுகொண்ட ஒரு பிள்ளையின் தாயான இலங்கைப் பெண்ணும் ஆவர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் மக்கள் நெரிசல் அதிகளவில் காணப்படுவதால், குறுகிய கால அவகாசத்தில் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால், இந்தியப் பெண்ணால் தமிழ்நாட்டிற்கு அழைக்கப்பட்ட இலங்கைப் பெண் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி இலங்கை வந்த இந்தியப் பெண், அக்கரைப்பற்றுக்குச் சென்று தனது இலங்கை காதலரின் வீட்டில் தங்கியிருந்தார்.

இலங்கை பெண்ணின் தந்தை இந்த உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்களை மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்தி இன்றைய தினம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன், குறித்த பெண்களை மனநல பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.