அவுஸ்திரேலிய தேசிய உள்ளக அரங்க கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கண்டி, மடவளையை சேர்ந்த வீரர் தேர்வு!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

அவுஸ்திரேலிய தேசிய உள்ளக அரங்க கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கண்டி, மடவளையை சேர்ந்த வீரர் தேர்வு!

2022 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய தேசிய உள்ளக அரங்க கிரிக்கட் சுற்றுப்போட்டி மெல்பர்ன் Casey உள்ளக அரங்கில் ஜூன் 26ம் திகதி முதல் ஜூலை 9ம் வரை நடைபெறவுள்ளது. 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளுக்கான சுற்றுப்போட்டிகள் கொரோனா காரணமாக பிற்போடப்படட நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இந்த சுற்றுப்போட்டியில் சுமார் 800க்கு மேற்பட்ட வீரர்களும் நடுவர்களும் Open Men, Open Women, 22&U Men, 22&U Women, Taveners division for players with an intellectual disability, U14 Boys, U15 Girls, U16 Boys, U18 Girls, U18 Boys போன்ற பிரிவுகளில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

இதில் இலங்கையை (கண்டி - மடவளை) சேர்ந்த Rila Rizvy தஸ்மானிய மாநில அணி சார்பாக Open Mens பிரிவில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் சுற்றுப்போட்டியில் பங்கேற்க்க தேர்வாகிய ஒரே இலங்கை வீரர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இவ்வருட சுற்றுப்போட்டியில் Big Bash League ல் ஓப்பந்தம் செய்யப்படட Sarah Coyte (NSW captain-coach/Melbourne Renegades), Meagan Dixon (QLD captain/Adelaide Strikers), Clint Hinchliffe (WA/Melbourne Stars), and Tegan McPharlin (SA/Adelaide Strikers) போன்ற வீரர்களும் பங்கேற்கின்றனர்.

அவுஸ்திரேலியா தேசிய அணி வீரர்களான Amanda Jade Wellington, Josh Philippe, Hannah Darlington, Jake Fraser-McGurk, Jhye Richardson போன்றவர்களும் கடந்த வருடங்களில் இந்த சுற்றுப்போட்டியில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2019ம் ஆண்டு நடைப்பெற்ற போட்டிகளில் Open Mens மற்றும் Women's Open பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்ற Queensland மாநில அணி Open mens பிரிவில் தனது 22வது சாம்பியன் படத்துக்காக இந்த வருடம் விளையாடவுள்ளது.
இந்த சுற்றுப்போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்கள் சர்வதேச உள்ளக அரங்க சுற்றுப்போட்டிகளில் அவுஸ்திரேலியா அணி சார்பாக விளையாடவும் தேர்வாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

மேலதிக விபரங்களுக்கு : https://www.cricket.com.au/news/indoor-cricket-australian-national-championships-all-you-need-to-know-guide-melbourne/2022-06-24

இறுதி போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்க Cricket Australia Youtube மற்றும் Facebook பக்கங்களை நாடவும்.
Link: https://www.facebook.com/CricketAusIndoor

தகவல்,
யாழ் நியூஸிற்காக Sahad Rismy (Melbourne)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.