இதன் மூலமாக சுமார் 50 மில்லியன் ரூபாய்கள் பெருமதியான அந்நிய செலவாணியை பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது
இம்முறை ஹஜ் யாத்திரைக்கு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சனத் தொகையை குறைக்க சவூத அரேபிய ஹஜ் குழு திட்டமிட்டுள்ளது.
இதன் காரணமாக மிகவும் சிறிய, 1585 பேர் கொண்ட ஒரு தொகையையே சவூதி அரேபியாவின் ஹஜ் ஏற்பாட்டுக் குழு இலங்கைக்கு வழங்கியிருந்தது. இத்தொகையையும் நிராகரிக்கும் விதமாக இம்முறை இலங்கையிலிருந்து ஹஜ்
யாத்திரைக்கு அனுமதி இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியான நிலைமையை கருத்தில் கொண்டு முஸ்லிம் மக்களும் பங்களிப்பு செய்ய வேண்டும் அதில் மாற்றுக் கருத்தில்லை.
இலங்கையைப் பொருத்தவரை பொருளாதார நெருக்கடி இருக்கும் நிலையிலும் அனைத்தும் வழமைபோன்று நடைபெறவே செய்கின்றது.
தனிப்பட்ட நபர்களின் வெளிநாட்டு பயணங்கள், பிரபுக்களின் வெளிநாட்டு பயணங்கள் அனைத்தும் வழமைபோன்று நடைபெறவே செய்கின்றன.
மேலும் 50 மில்லியன்கள் என்பது ஒரு அமைச்சரின் அல்லது இரு அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்தின் செலவாகும்.
50 மில்லியன் பெறுமதியான அந்நியச் செலாவணி என்பது இலங்கையை பொறுத்தவரை ஒரு சிறு தொகையாகும்.
பத்தாயிரம் அல்லது அதனை அன்மிக்கும் ஹாஜிகளின் தொகையில் இருந்து அல்லது அதற்கு மேற்படும் தொகையில் இருந்து நாட்டின் நிலமையை கருத்தில் கொண்டு 1,500 வரை அதற்கு மேற்படாமல் சுருக்கிக் கொள்வது என்பது நாடு இருக்கும் நிலையில் இருந்து ஒரு நியாயமான முடிவாகும்.
மேலும் இலங்கையில் இம்முறை ஹஜ் கடமை, நெருக்கடி நிலைமை காரணமாக இடை நிறுத்தப்பட்டாலும், எதிர்வரும் வருடங்களில் இலங்கையின் நிலைமை சீராகலாம் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை.
இலங்கை நிலைமை தொடர்ந்தும் பாதாளத்தை நோக்கி செல்லும் என்ன பொருளியல் நிபுணர்கள் எதிர்வு கூறி உள்ளனர் . மேலும் இலங்கையின் நிலவரம் மாற்றமடைய பல வருடங்கள் செல்லும் எனவும் கூறப்படுகின்றது. எனவே இந்த வருடத்தை விடுத்து அடுத்த வருடத்தில் இதைவிட நிலைமை மோசமடையுமா, அல்லது சீராகுமா என்பது தற்போதைய நிலைமையில் அளவிட முடியாது உள்ளது.
இந்நிலையில் கிடைத்திருப்பது சொற்பமான விசா அனுமதியே. எனவே இச் சிறு தொகையும் பெற்று சொற்பமான தொகையை ஏற்று, குறைந்த அளவில் முஸ்லிம்கள் ஹஜ் கடமைகளை நிறைவேற்றிக் கொள்வது சாலச் சிறந்ததாகும் என்பதே அதிகப்படியான மக்களின் பொதுவான கருத்தாகும்.
வழமையாக பத்தாயிரத்தை
அண்மித்த அளவிலான தொகையில் ஹஜ் யாத்திரிகள் பயணிக்கும் அதேவேளை நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு இம்முறை கிடைத்திருக்கும் சொற்ப அளவிலான தொகையை பயன்படுத்திக் கொள்வது எதிர்கால ஹஜ் நடவடிக்கைகளுக்கு உதவியாக அமையும்.
பல வருடங்களுக்கு முன்பு ஹஜ் கடமைக்காகbமிகக் கூடுதலான வீசாவை பெற்றுக்கொண்ட இலங்கை. வழமையான ஹஜ் யாத்திரிகளே ஹஜ் கடமையை நோக்கி பயணித்தார்கள்.
இதனால் இலங்கையின் மீது அதிருப்தி தெரிவித்த சவூத அரேபியா ஹஜ் ஏற்பாட்டுக் குழு, இதை இலங்கை முதலில் அறிவித்திருந்தால், இச்சலுகையை வேறு நாடுகளுக்கு வழங்கி இருக்கலாம் என தெவித்திருந்தது.
அதற்கு அடுத்த வருடத்தில் மிகவும் குறைவான ஒரு தொகையையே இலங்கைக்கு அனுமதித்திருந்தது. அக்காலகட்டத்தில் ஹஜ் செல்லும் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியதோடு மீண்டும் சவூதி அரேபியா ஹஜ் குழுவுடன் பேசி மீண்டும் ஒரு சிறு தொகையை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகியது. ஆயினும் அதுவும் போதுமானதாக இருக்கவில்லை.
எனவே இவ்வாறான முடிவுகள் எதிர்காலத்தில் இலங்கைக்கான விசா அனுமதிகளின் அளவை பாதிக்கலாம்.
மேலும் கடந்த காலங்களில் கொரோனா தோற்று காரணமாக இலங்கை மக்கள் ஹஜ் கடயையை நிறைவேற்ற முடியாமல் போனமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதனால் ஹஜ் நிறைவேற்றிக்கொள்ள
நீண்ட வரிசைகளில் மக்கள் காத்து நிற்கின்றனர். இந்த முடிவின் காரணமாக அவ்வாறான மக்களின் நிலைமை சிலவேளை ஹஜ் செய்யும் ஆவலுடன் உலகை விட்டு பிரியும் நிலையும் ஏற்படலாம்.
மேலும் வெளிநாட்டில் வேலை செய்யும் சில மக்கள், தங்களது செலவில் பெற்றோர்களை ஹஜ் செய்ய ஆவலுடன் காத்திருக்கும் நிலையும் அற்றுப் போகலாம்.
ஆகவே சில நிலைமைகள், சந்தர்ப்பங்கள் இவ்வாறு அமையுமானால், தற்போது எடுத்து இருக்கும் முடிவு ஒரு துரதிஷ்டமாக அமைவதோடு, இந்த நிலைமைகளுக்கு அல்லாஹ்விடம் பொறுப்பாளர்களாக ஆகலாம்.
எனவே எதற்கும் இவ்வாறான முடிவை மீள் பரிசீலனை செய்வதே சகலருக்கும் சிறந்ததாகும்.
-பேருவளை ஹில்மி