
இதன்படி, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நாளை (27) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1,690 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஐஓசி போன்ற எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் உள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அவ்வாறான எரிபொருளை வழங்குவதற்கு அரசாங்கம் நிபந்தனை விதிப்பதாகவும் குறைந்த பட்சம் ஒரு வருடம் அல்லது ஆறு மாதங்களுக்கு கடன் அடிப்படையில் தமது நிறுவனங்களிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)