
இதன்படி, தற்போதுள்ள தேவையில் 50 சதவீதத்திற்கு மாத்திரம் தொடர்ந்து எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரம், பொது போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் விநியோகத்தை முன்னுரிமையாக வழங்குவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
தற்போதுள்ள எரிபொருள் கையிருப்புகளை 7 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் எனவும் அதன் பின்னர் எரிபொருள் கடன் வசதியை மேலும் நீட்டித்ததன் பின்னர் மேலும் 4 மாதங்களுக்கு போதுமான எரிபொருளை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
நாளை (16) 40,000 மெற்றிக் தொன் எரிபொருள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் கப்பல்கள் பெறப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)