சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னுடைய பாடலால் மக்களை கட்டிப் போட்டு வந்த கேகே, நேற்று (31) மாலை திடீரென உயிரிழந்துள்ளார்.
கொல்கத்தா பகுதியில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கிருஷ்ணகுமார் குன்னத், அங்கே பாடிக் கொண்டிருந்த போது திடீரென மேடையிலே சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அவரை சேர்த்த போது, பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.