
"இலங்கையின் தற்போதைய சூழ்நிலையை சமாளிப்பது மற்றும் அதற்கான தந்திரோபாய மற்றும் மூலோபாய ஆதரவைப் பெறுவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அவருடன் நீண்ட நேரம் கலந்துரையாடினார்" எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் நேற்று உலக உணவுத் திட்டப் பிரதிநிதிகளையும் சந்தித்தார்.
“அரசாங்கம் எடுத்த மிக மோசமான முடிவுகளில் ஒன்று இரவோடு இரவாக உரங்களுக்குத் தடை விதித்தது. இப்போது நாம் உணவு நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த உதவும் WFP (உலக உணவுத் திட்டம்) மற்றும் FAO (
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு) பிரதிநிதிகளை சந்தித்தேன்” என்று எதிர்க்கட்சித் தலைவர் ட்வீட் செய்துள்ளார். (யாழ் நியூஸ்)