இன்றைய தினம் (06) நாடளாவிய ரீதியில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இன்று நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு மே மாதத்துக்கான வேதனம் வழங்கப்படமாட்டாது என சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடிதத் தலைப்பில் செய்தியொன்று பகிரப்பட்டு வருகின்றது.
எனினும், குறித்த அறிவிப்பு பொய்யானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விளக்கமொன்றை வழங்கியுள்ளது.
ஜனாதிபதி செயலகம் அல்லது பொது நிர்வாக அமைச்சுக்கு இவ்வாறான அறிவித்தல்கள் எவையும் வழங்கப்படவில்லை என்றும் இந்த பொய்ப் பிரசாரம் தொடர்பில் உரிய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.