குறிப்பிட்ட காலத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்து நிரந்தர பாராளுமன்றம் அமைப்பது தொடர்பில் 11 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டதாக சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் தலைமையில் கூடும் பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் குழு எடுக்கும் தீர்மானங்களை உடனடியாக அமுல்படுத்துவது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறினார்.
அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களுக்கான பிரேரணைகளை தமது கட்சி தொடர்ச்சியாக சமர்ப்பித்து வருவதாக கட்சி பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியதாக திரு. குணவர்தன கூறினார்.
பாராளுமன்றத்தில் சர்வகட்சி உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை எனவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு செலவிடப்பட்ட கால அவகாசம் அதனை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)