
இந்தப் பிரேரணை இன்னும் கலந்துரையாடலில் உள்ளதாகத் தெரிவித்த அவர், கடலுக்கடியில் உள்ள கேபிள் அமைப்பை இணைப்பதற்கான செலவில் சிக்கல் இருந்தாலும், மேல்நிலை இணைப்பு முறை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
ஆனால் இவை அனைத்தும் பேச்சுவார்த்தை அளவில் மட்டுமே உள்ளது என்றார்.
அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக ராய்ட்டர்ஸ் செய்திச் சேவையும் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)