
சந்தேக நபரிடம் இருந்து 20 எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் மற்றும் 20 வெற்று சிலிண்டர்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், சந்தை விலையை விட இரண்டு மடங்கு விலை ரூ. 9260 இற்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்வதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி அன்ஸ்லம் த சில்வாவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இரகசியப் புலனாய்வாளர் ஒருவர் எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்வதற்காக களமிறக்கப்பட்டு குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)