ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (23) காலை இந்த பதவிப் பிரமாணம் நிகழ்வு இடம்பெற்றது.
இதற்கமைய கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தவும் வீதி மற்றும் நெடுஞ்சாலைகள்,ஊடகத்துறை அமைச்சராக பந்துல குணவர்தனவும் நீர் வழங்கல் அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெலவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
அத்துடன், விவசாயம் மற்றும் வனவிலங்குகள், வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராக மஹிந்த அமரவீரவும், கைத்தொழில் அமைச்சராக ரமேஸ் பத்திரணவும் விதுர விக்ரமநாயக்க புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சராகவும் அஹமட் நஸீர் சுற்றாடல் அமைச்சராகவும் அனுருத்த ரணசிங்க நீர்பாசனம், இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.