மின்வெட்டு காரணமாக மண மேடை இருளில் சூழ இரு வேறு நபர்களை மணந்த தம்பதிகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மின்வெட்டு காரணமாக மண மேடை இருளில் சூழ இரு வேறு நபர்களை மணந்த தம்பதிகள்!

மின்சாரத் துண்டிப்பால் பல்வேறு இன்னல்களுக்கும் மக்கள் உள்ளாவது வழமையாகும்.

ஆனால் இந்த மின்சாரத் துண்டிப்பு இந்தியாவைச் சேர்ந்த சகோதரிகள் இருவரின் திருமண வாழ்வையே தடம்புரளச் செய்துள்ளது.

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள அஸ்லனா கிராமத்தைச் சேர்ந்த சகோரிகளுக்கு ஒரே நாளில் திருமணத்திற்கு நாள் நிர்ணயிக்கப்பட்டது.

திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மண மேடை எங்கும் இருள் நிலவியது.

இந்நிலையில் இந்து மத பாரம்பரிய வழக்கப் பிரகாரம் சிவப்பு நிற பட்டாடை அணிந்து மலர்களான முகத்திரை அணிவிக்கப்பட்டு மணமேடைக்கு மணமகள்களான சகோதரிகள் இருவரும் அழைத்து வரப்பட்டனர்.

மணமேடையில் குத்துவிளக்குகள் மற்றும் ஹோம குண்டத்திலிருந்து வெளிப்பட்ட சொற்ப வெளிச்சத்தைத் தவிர பெருமளவில் இருள் நிலவியது.

இந்நிலையில் மணமகள்மார் இருவரும் தவறுதலாக அவரவர்க்குரிய மணமகனுக்கு அருகில் அமர வைக்கப்படாது இடம்மாற்றி அமர வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து மதகுரு முதலாவது சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகனை இரண்டாவது சகோதரிக்கும் இரண்டாவது சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகனை முதலாவது சகோரிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

மதகுரு இருளில் மணமகள்மாரை அடையாளம் தெரியாது தவறாக வழிநடத்தியதாலேயே இவ்வாறு திருமணத்தில் ஆள்மாறாட்டம் இடம்பெற்றதாக மணமகள்மாரின் தந்தையான ரமேஷ் லால் தெரிவித்தார்.

இந்த விபரீத திருமணம் குறித்து பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் செவ்வாய்க்கிழமை(10) இரவு தகவல்களை வெளியிட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.