அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை நகர முதல்வர் சமன் லால் பெர்னாண்டோ மற்றும் டேன் பிரியசாத் உள்ளிட்ட 08 பேர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (19) கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே முன், முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.