நாட்டில் எரிபொருள் நிலைமைகள் குறித்து ஆராயும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவுடனான கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருளை கூட்டுறவு திணைக்களத்தின் கீழ் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இராணுவம், பொலிஸ் மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.