இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தற்போது இறுதிக்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது, இதனால் அவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உருவாக்க முடியும்.
இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தினை தொடர்ந்து, திங்கள்கிழமை பதவியை இராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சவுக்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
மகிந்த ராஜபக்சவின் இராஜினாமாவின் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் பதவி வெற்றிடமாக இருப்பதுடன், ஏனைய முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையிலான அரசியல் முட்டுக்கட்டையும் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பங்கள் காரணமாக
இந்த விடயம் தொடர்பில் தற்போது இறுதிக்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது, இதனால் அவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உருவாக்க முடியும்.
🔵 நமது Telegram குழுமத்தில் இணைய கீழே உள்ள Link இனை Click செய்யவும்
LINK: https://t.me/yazhnews
மகிந்த ராஜபக்சவின் இராஜினாமாவின் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் பதவி வெற்றிடமாக இருப்பதுடன், ஏனைய முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையிலான அரசியல் முட்டுக்கட்டையும் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பங்கள் காரணமாக
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியினை இராஜினாமா செய்ய வேண்டும் என்று கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் எதிர்க்கட்சிகள் பிரதமர் பதவியை ஏற்க மறுத்துள்ளன. (யாழ் நியூஸ்)