புதிய பிரதமர் ரணிலுக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய பிரதமர் ரணிலுக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு!

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முற்போக்கான தீர்மானங்களுக்கு புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தமது பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டுக்கு நன்மை பயக்கும் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பதவிகளை ஏற்காமல், பாராளுமன்ற செயற்பாட்டின் ஊடாக தமது பூரண ஆதரவை வழங்குவதற்கு தமது பாராளுமன்ற குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்ய முயற்சித்தால் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.