
முச்சக்கர வண்டியில் இருந்து மீண்டும் கேன்களில் எரிபொருள் நிரப்புவதுடன், மீண்டும் அதே முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் நிரப்பி வருகின்ற நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் வேகமாக தீர்ந்துவிடுவதால், பலருக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த கார் உரிமையாளர்கள், சில முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அதிக விலைக்கு பெற்றோலை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த நிலைமைகளினால் பலருக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)