VIDEO: 69 லட்சத்தின் ஆதரவு இருப்பதால் ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியமில்லை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: 69 லட்சத்தின் ஆதரவு இருப்பதால் ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியமில்லை!!


இலங்கையில் உள்ள 6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தனது இராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த அமைச்சர் பெர்னாண்டோ, மக்கள் ஆணையை ஜனாதிபதி இன்னும் வைத்திருப்பதாக தான் நம்புவதாக தெரிவித்தார்.


ஜனாதிபதிக்கு இன்னும் மக்களின் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


தற்போது முன்னெடுக்கப்படும் பொதுப் போராட்டங்கள் சிறிய போராட்டங்கள் என தெரிவித்த அமைச்சர், எனினும் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.