மக்களை வதைக்கின்ற அரசாங்கத்தை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி) இன்று காலை பேருவளையில் இருந்து ஆரம்பித்த மூன்று நாள் பாதயாத்திரை இன்று பிற்பகல் களுத்துறையை சென்றடைந்ததுடன் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
தேசிய மக்கள் இயக்கத்தின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அவரசூரிய, ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாம் நாள் நடைபவனியானது நாளை வாத்துவையில் இருந்து ஆரம்பமாகி எதிர்வரும் 19
ஆம் திகதி கொழும்பை சென்றடையும். (யாழ் நியூஸ்)