300 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் இணைந்து இவ்வாறு ஹர்த்தாலை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் சார்பில் சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் அனைத்து நகரங்களையும் உள்ளடக்கி பொது மக்களின் பங்களிப்புடன் இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.