
கலாநிதி. சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சராக பணியாற்றினார்.
நாட்டில் நடந்து வரும் மக்கள் போராட்டங்கள் காரணமாக அமைச்சரவை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவரது இராஜினாமா வந்துள்ளது.
இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி பொதுமக்கள் கடந்த சில நாட்களாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)