காலி முகத்திடலில் பகிரங்கமாக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரிய ஒரு கிறிஸ்தவ சகோதரர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காலி முகத்திடலில் பகிரங்கமாக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரிய ஒரு கிறிஸ்தவ சகோதரர்!

காலிமுகத்திடலில் போராட்ட களத்தில் உள்ள கருத்துச் கூறும் இடத்தில் ஒரு கிருஸ்துவ சகோதரன் ஆற்றிய உரை .

நாள். 23 ஆம் திகதி
நேரம். இரவு 11.50

நான் இத்தாலியில் வசிக்கிறேன். நாட்டை கொள்ளையர்களிடம் இருந்து விடுவிக்கும் விடுதலைப் போராட்டத்திற்காக இரு தினங்களுக்கு முன்பு தாய் நாட்டிற்கு வந்தேன்.

தற்போது இத்தாலியில் ஒரு மரத்தில் ஒரு இலை கூட கிடையாது. மரத்தின் நார்கள் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் எமது நாடு அவ்வாறில்லை. என்றும் ஒன்று போல் ஒரு வளமான நாடு. இந்த வளமான நாட்டில் என் தந்தையின் பைபாஸ் சத்திர சிகிச்சைக்காக என் குடும்பம் பட்ட வேதனை எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.   

ஆனால் வளங்கல் அற்ற இத்தாலியில் நோயுற்ற ஒருவனுக்கு ஐந்து நிமிட அவகாசம் தேவை. தொலைபேசியில் அழைப்பு விடுத்த அடுத்த நிமிடமே அவன் வீட்டிற்கு Embulance வந்து விடுகின்றது. ஒருவனுக்க பைபாஸ் சிகிச்சை செய்ய வேண்டுமாயின் இத்தாலி அரசு இத்தாலி அரசு ஒரு யூரோ கூட வாங்குவது இல்லை.

ஆனால் கண்ட இடமெல்லாம் நீர் கிடைக்கக்கூடிய ஒரு நாட்டின், எந்தப் பகுதியிலும் மரக்கட்டையை நட்டினால் செழிக்கக்கூடிய இந்த நாட்டில் அத்தனைக்கும் பணம் அறவிடப்படுகின்றது. நமது வளங்கள் அத்தனையையும்
கொள்ளையர்கள் கொள்ளை அடித்து விட்டார்கள்.

இதற்காக இவர்கள் பாவித்த
ஒரே வழி இனவாதம். இதற்காக நமக்கு வழங்கப்பட்ட ஒரே ஒரு மாத்திரை வந்த பெதி என்பதாகும். 

அவர்கள் எமக்கு தந்த வந்த பெதிடியை நாம் நன்றாக சுவைத்து சாப்பிட்டு விட்டோம். அவர்கள் தந்த வந்த பெத்தயில் நாம் மயங்கி விட்டோம். நாம் அன்று சுவைத்து உண்ட வந்த பெத்தியின் விஷத்தை நாம் இன்று அனுபவிக்கின்றோம்.

அவர்கள் தந்த மாத்திரையை நாம் ரசனையோடு முன்று வருடங்கள் உண்டோம். அந்த மயக்கத்தில் நாம் அனைவரும் இருக்க அதற்குள் அத்தனையையும்
திருடிவிட்டார்கள்.

முஸ்லிம் சமூகத்தை மூன்று வருடங்கள் நாம் நமது எதிரிகளாக நினைத்தோம்.
அவர்களுடன் வைராக்கியம்
கொண்டோம். கிறிஸ்துவ சமுதாயம் சார்பில் இந்த மக்கள் சமூகத்தின் ஜனத்திரள் மத்தியில் நான் இன்று பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன். 

இவ்விடத்தில் ஒரு முஸ்லிம் சகோதரர் இருந்தாள் தயவு செய்து இவ்விடத்திற்கு வரவும். கிறிஸ்தவ சமூகம் சார்பில் அவர்களிடம் அவர்களின் காலில் விழுந்து நான் மன்னிப்பு கோர வேண்டும். என அவர் மூன்று முறை உரத்த குரலில் அழைப்பு விடுத்தார்.

உரை தொடர்ந்து கொண்டிருந்தது, பல முஸ்லிம் சகோதரர்கள் அவ்விடத்தில் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். அவர் காலில் விழுந்து மன்னிப்பு கோர அழைத்ததனல் அங்கு செல்லவில்லை.

முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோரும் வகையிலான ஒற்றுமையை வலியுறுத்தும் கவிகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.

-தமிழில் பேருவளை ஹில்மி

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.