
இதேவேளை, பிரதமர் பதவிக்கு டலஸ் அழகப்பெரும, நாமல் ராஜபக்ஷ மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோரும் முன்மொழியப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் முதல் வாரத்தில், பிரதமர் பதவி விலகத் தயாராகி வந்தார், ஆனால் அமைச்சர்கள் குழுவால் அந்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், பிரதமர் பதவி விலகினால் அரசாங்கத்தில் உள்ள பெருமளவிலான உறுப்பினர்கள் சுயாதீனமாகி ஆட்சி கவிழும் நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. தொடர்ந்தும் பதவியில் இருக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)