அநுராதபுரத்தில் உள்ள பிரபல ஜோதிடர் ‘ஞான அக்கா’வின் இல்லத்திற்கு அருகில் இன்று முற்பகல் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அனுராதபுரத்தில் உள்ள ஞான அக்காவின் விகாரைக்கு ஆதரவாளர்கள் குழுவை வழிநடத்தியுள்ளதோடு, குறித்த குழு காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஞான அக்காவுக்கு எதன் அடிப்படையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, அவர் அரசியல்வாதியா என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் ஹிருணிகா கேள்வி எழுப்பியதை காணொளி காட்சிகள் காட்டுகின்றன.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்கள், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குறிசொல்பவரின் வீட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்றதை அடுத்து, அப்பகுதியில் விரிவான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.(யாழ் நியூஸ்)