ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலமில் உள்ள முஸ்லிம்களின் புனிதத் தளங்களில் ஒன்றான அல்-அக்ஸா பள்ளிவாயலுக்குள் நுழைந்த இஸ்ரேலிய பொலிசார் நூற்றுக்கணக்கான தொழுகையாளிகளை தடுத்து வைத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில், குறைந்தது 158 பாலஸ்தீன முஸ்லிம்கள் காயமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாக அல்-ஜஸீரா சர்வதேச செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
முஸ்லிம்களின் புனிதமிக்க ரமழான் மாத இரவு வணக்கங்கள் உலகம் முழுவதும் இடம்பெற்று வரும் நிலையிலேயே வழமை போல் மீண்டும் இஸ்ரேல் பாலஸ்தீன முஸ்லிம்கள் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
https://www.aljazeera.com/news/2022/4/14/fear-violence-israeli-palestinian-tensions-rise-ramadan