அந்தர் பல்டி அடித்த இரண்டாவது நபர் - அரசிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்க இணக்கம்!
advertise here on top
advertise here on top

அந்தர் பல்டி அடித்த இரண்டாவது நபர் - அரசிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்க இணக்கம்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து பியங்கர ஜயரத்னவின் இராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன கடந்த வாரம் அரசாங்கத்தில் இருந்து விலகிய போதிலும், இன்று மாலை ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்ததன் பின்னர் தனது இராஜாங்க அமைச்சுப் பதவியில் தொடர்ந்து நீடிக்க தீர்மானித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான 41 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட சுயேச்சைக் குழுவிலிருந் விலகிய 2வது நபர் இவராவார். .

இதற்கு முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார். (யாழ்
 நியூஸ்)Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.