பணிப்புறக்கணிப்பு இருந்தாலும் பாடசாலை நடவடிக்கைகள் தொடரும்!
advertise here on top
advertise here on top
happy kids fun world

பணிப்புறக்கணிப்பு இருந்தாலும் பாடசாலை நடவடிக்கைகள் தொடரும்!


இன்று (25) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 

பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டிருந்த போதிலும் ஆசிரியர்கள் இன்று பாடசாலைகளுக்கு சமூகமளிப்பார்கள் என நம்புவதாக அமைச்சர் கூறினார். 

தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுப்பது ஆசிரியர்களின் உரிமையென்றாலும் பாடசாலை மாணவர்களை கருத்திற்கொண்டு இன்றைய தினம் பாடசாலைகளுக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என கல்வி அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பல ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தொழிற்சங்க போராட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன. (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.