இன்று காலி முகத்திடல் போராட்டத்தில் எம் மனதை நெகிழவைத்த சம்பவம் -பேருவளை ஹில்மி
advertise here on top
advertise here on top

இன்று காலி முகத்திடல் போராட்டத்தில் எம் மனதை நெகிழவைத்த சம்பவம் -பேருவளை ஹில்மி

காலி முகத்திடலில் பல தடைகளையும் தாண்டி பல லட்சங்களை கொண்ட ஜனசமுத்திரத்தின் மத்தியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது. அவ்விடத்தில் இருந்து video க்கள் photo க்கள் share செய்ய முடியாமல் Mobile signal கள் அவ்விடத்தில் இருந்து தடை செய்யப்பட்டிருந்தாலும், மக்கள் சனத்திறல் நிரம்பி வழிகின்றன. இது இன்று இரவு முழுவதுமாக, நாளையும் தொடரும் என அறியக் கிடைத்தது. மக்கள் போவதும் வருவதுமாக தொடர்ந்தும் அரசுகெதிரான போராட்டம் தொடர்கிறது.

இதில் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களும் கலந்து கொணாடுள்ளனர்.

இதற்கு மத்தியில் முஸ்லிம் மக்களுக்கான நோன்பு திறக்கும் ஏற்பாடுகள் நடு வீதியில் ஏற்படுத்தப்படுடிருந்தன.

நோன்பு திறப்பதற்காக முஸ்லிம் மக்களுடன் அந்நிய மக்களும் சந்தோஷமாக கலந்து கொண்டதோடு, நோன்பு திறப்பதற்கு உற்காந்து இருந்தவர்களுக்கு அந்நிய மக்களும் பேரீச்சம் பழம், பழங்கள், பழச்சாறுகள் பிஸ்கட் பக்கட்டுகள் அனைத்தையும் கொண்டு வந்து பகிர்ந்து கெளரவித்தனர். அத்தோடு அவர்களும் முஸ்லிம் மக்களுடன் நடு வீதியில் அமர்ந்து இப்தார் நிகழ்சியில் கலந்து கொண்டனர். இது உண்மையில் அங்கிருந்த மக்களை பல வருடங்களின் பின் மகிழ்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்ற ஒரு சம்பவமாகும். அவர்களின் வாய்களில் இருந்து இனி வேண்டாம் இனவாதம் என்ற கோஷமும் எழுந்த வண்ணம் இருந்தது.

இப்தார் நிகழ்சி முடிந்ததும் நடுவீதியில் தலைமையில் தொழுகை நடத்தப்பட்டது. தொழுகைக்காக அந்நிய மக்கள் இடங்களில் இருந்து ஒதுங்கி தாங்களிடம் இருந்த விரிப்புக்களையும் சுலோகங்களையும் விரித்து ஆதரவு தந்ததை கண்டு என் மனக் நெகிழ்ந்தது. இரு கைகளையும் வானத்தின் பக்கம் உயர்த்தி அல்லாஹ்வை புகழந்து கொண்டேன். அனைத்தும் அம்ஹர் மெளலவியின் தலைமையில் நடைபெற்றது.

பதவிக்காக முஸ்லிம்களை இந்த நாட்டின் முஸ்லிம்களை எதிரிகளாகவும் விரோதிகளாகவும் காட்டி அல்லாஹ்வை தூற்றி முஸ்லிம் சமூகத்தை சீரழித்து, முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் பர்தாக்களை நடுவீதியில் கலட்டிய, கெட்ட கயவர்களை அல்லாஹ் இன்று உலக அளவில் உண்மையை வெளிப்படுத்தி தன் சக்தியை கொண்டு சீரழிக்கின்றான்.

அந்த இடத்தில் என் மனதில் தோன்றியது....!

இந்த ஈமான் இல்லாத மக்கள் உண்மையை விளங்கிய நிலையில், இனி இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இந்த மக்கள் எதிரிகள் அல்ல. எதிரிகள் இந்த அந்நிய மக்கள் அல்ல, அற்ப உலக பதவிக்காக அநியாயகாரர்களோடு கை கோர்த்து நின்ற்கும் நம் மக்களே நமது எதிரிகள் , நமது சமூகத்தில் பதவிக்கு வக்காலத்து வாக்குபவர்களே நமது எதிரிகள் என நினைக்கத் தோன்றியது.

அல்லாஹ் அக்பர்
அல்லாஹ் பெரியவன்

தொடரந்தும் இந்த நாட்டில் அனைவரையும் கெளரவமாக வாழவைப்பானாக.

(பேருவளை ஹில்மி காலி முகத்திடலில் இருந்து )
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.