கடைகளை பூட்டி ஹர்த்தால் - எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!
advertise here on top
advertise here on top

கடைகளை பூட்டி ஹர்த்தால் - எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டுக்கு எதிராக ஹட்டன் கொட்டகலை நகர வர்த்தகர்கள் சங்கம் மார்ச் 6 ஆம் திகதி அனைத்து கடைகளையும் மூடிவிட்டு கறுப்புக்கொடி ஏந்தியவாறு ஊர்வலம் நடத்தினர்.

கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் இந்து கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்ற கொட்டகலை வர்த்தக சங்க உறுப்பினர்கள், அரசாங்கத்திற்கு எதிராக தேங்காய் அடித்து, கொட்டகலை நகரில் கறுப்புக் கொடி ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனர்.

பெருமளவிலான தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் உறுதியளித்த 1000 ரூபா பணம் கிடைக்கவில்லை என போராட்டத்தை ஏற்பாடு செய்த கொட்டகலை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் புஷ்பா தெரிவித்தார்.

டீசல் எரிபொருள் பற்றாக்குறையால் கொழும்பில் இருந்து கொட்டகலைக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவற்றின் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்வதற்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இருப்பு இல்லை.

நாட்டு மக்கள் கஷ்டப்படும் இவ்வேளையில் ராஜபக்ச குடும்பம் தாயகத்தில் இருந்து கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு அரசியலை விட்டு இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என தெரிவித்தனர்.

ராஜபக்ச ஆட்சி முடியும் வரை தனது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கொட்டகலை வர்த்தகர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்திற்கு கொட்டகலை முச்சக்கர வண்டிகள் சங்கமும் ஆதரவு தெரிவித்திருந்தது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.