வேலைநிறுத்தம் காரணமாக நாட்டில் வங்கிச் சேவைகள் பாதிப்பு!
advertise here on top
advertise here on top
happy kids fun world

வேலைநிறுத்தம் காரணமாக நாட்டில் வங்கிச் சேவைகள் பாதிப்பு!

இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பல வங்கித் தொழிற்சங்கங்களும் நாளை (28) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.

திட்டமிட்ட வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல பொது மற்றும் தனியார் வங்கிகள் மூடப்படும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

வேலை நிறுத்தப் போராட்டம் காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கியும் டோக்கன் வேலைநிறுத்தம் காரணமாக அதன் பல சேவைகளை கட்டுப்படுத்தும் முடிவை அறிவித்துள்ளது.

அரச, அரை அரசு, பொது மற்றும் தோட்டத் துறைகளைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எதிராக பெரிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் வங்கித் துறை வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த உள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.