முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதே போன்று நீடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் பொதுமக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு முன்பாக தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வழங்கிய பாதுகாப்பும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்பும் அவ்வாறே வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களது வீடுகளுக்கு அருகில் கலவரம் ஏற்படும் பட்சத்தில் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையையும், தேவைப்பட்டால் ஆயுதப்படையினரையும் பணியில் ஈடுபடுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)